27.7.05

செம்பருத்தி

செம்பருத்தி, சிதம்பருத்தி, செவ்வரத்தை, சிதம்பரத்தை...
எது சரி...?


என் வீட்டு பல்கணியில் முந்தநாள் ஒற்றைச் செம்பருத்தி பூத்தது. அதை எனது கமராவுக்குள் அடக்க முயன்றேன். ஏனோ பளிச்செண்டு வரவில்லை. கலங்கலாகவே வந்தது.






நேற்று இரண்டு பூக்கள் பூத்தன. அவையோடும் முயற்சித்துப் பார்த்தேன். எதிர் பார்த்தது போல வரவில்லை.


பக்கத்தில் இருந்த கக்ருஸ் பூவும் செம்பருத்தி போலச் சிவப்பு. கக்ருஸின் தமிழ்ப்பெயர் தெரியவில்லை. கள்ளிச்செடியின் ஒரு வகையாக இருக்கலாம்.

7 comments:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

We used to call it "cembaruththi". But Gnaa.Devaneeyap paavaaNar, after his vivid search in Tamilology, found it as "cembaraththai."
EngkaL viittup paalkani'yil ADUKKUCH CHEMBARUTHTHI naaLthooRum puuththu azakaaga cirikkiRathu.
abiraami'yai "maathuLampuu niRaththaaLai" enRu Abiraami Battar paadiyathu cembaruththi avar muRRaththil thinanthooRum puukkaathathaala? enRu ninaippathen vazakkam.
civappu "kakkruse" kaLLiccedi vakaiyaic caarnthathuthaan.

Anonymous said...

செம்பருத்தி அழகான பூ. கொஞ்சம் out of focus - ரொம்பக்கிட்ட இருந்து எடுக்கிறீர்களோ?

U.P.Tharsan said...

அழகாக இருக்கிறது. உங்களின் இடத்தில் பூக்கள் வளர்க்க இடமிருக்கிறது. நான் என்வீட்டிலிருந்துகொண்டு எதிர்வீட்டில் வளர்க்கப்படும் பூக்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறேன்.:-((

துளசி கோபால் said...

வதனா,

அதென்னங்க கக்ரூஸ் பூ? இங்கே அதை 'கிறிஸ்மஸ் காக்டெஸ்'ன்னு சொல்றாங்க. நம்ம வீட்டுலே மெஜந்தா பிங்க் கலருலே பூத்து நிறைஞ்சிருக்கு. இது இங்கே வின்டர் பூ!

Chandravathanaa said...

பசுபதி
உங்கள் வரவுக்கும் விளக்கத்துக்கும் நன்றி.
உங்கள் பதிவு ஏன் அப்படியே இருக்கிறது. ஏதாவது எழுதலாமே!

தங்கமணி
நீங்கள் சொல்வது சரிதான்.
புகைப்படக்கலையை நான் கற்கவில்லை.
சும்மா என்னுள்ளே இருக்கும் ஆர்வத்தில்தான் எடுப்பேன்.
பூவைப் பெரிதாக எடுக்க நினைத்து மிக அருகில் எடுத்து விட்டேன்.

தர்சன்
எனது முந்தைய வீடும் பெரிது. பல்கணியும் பெரிது.
வீட்டையே சோலை போல வைத்திருந்தேன்.
தற்போது மிகச் சிறிய வீடு. பல்கணியும் சிறிதுதான். அதிலே ஓரிரு மரங்கள் மட்டுமே.

அடுத்த வீட்டு பல்கணிகள் எனக்கும் எப்போதும் அழகாய்த்தான் தெரியும்

துளசி
இங்கும் இதை Weinacht kaktus(Christmas kaktus) என்றுதான் சொல்வார்கள்.
ஆச்சரியமென்னவென்றால் Weinacht kaktus(Christmas kaktus) எத்தனை என் வீட்டில் வைத்தாலும் அவை கிறிஸ்மசுக்கு பூக்காமல் பின் ஒரு சமயத்தில்தான் பூத்துக் குவிக்கின்றன. நான் தண்ணீர் விடுவதில் ஏதோ ஒரு பிழை இருக்க வேண்டும். கக்ருசுக்கு வின்ரர் காலத்தில் தண்ணீரே விடக் கூடாதாம். வெப்பமூட்டி அறையில் இருந்தால் ஒரு துளி தண்ணீர் விட வேண்டுமாம். இந்த முறையிருக்க, நான் விடும் தண்ணீர் அளவு பிழைக்கிறதோ தெரியவில்லை. என் வீட்டில் கிறிஸ்மஸ் கடந்து ஒரு முறையும், கிறிஸ்மசுக்கு முன் ஒரு முறையும் என்று பூத்துக் குவிக்கின்றன.

Sud Gopal said...

"என் வீட்டுச் செடியில் பூ பூப்பதில்லை.
பூப் பூக்கும் செடிகள் என் வீட்டில் இல்லை..."
ஹூம்.இத எழுதிய கவிஞர் பேரு மறந்து போச்...

ரொம்ப நன்றாக இருக்கிறது தங்களின் ஒளி ஓவியம்...

Chandravathanaa said...

நன்றி சுதர்சன்